வந்தவாசி: நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடல் சுகாதாரம், கை கழுவும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு!
வந்தவாசி: நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உடல் சுகாதாரம், கை கழுவும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் உடல் நலப் பாதுகாப்பு முறைகள் மற்றும் கை கழுவும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவர் காளிச்செல்வம், கண் மருத்துவ உதவியாளர் லாரன்ஸ், சுகாதார ஆய்வாளர் என். வினோத், சுகாதார செவிலியர் கௌசல்யா உள்ளிட்டோர் பங்கேற்று உடல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை மாணவர்களுக்கு விளக்கினர்.
மேலும் கோடைக்காலத்தில் உண்ணும் உணவு பொருட்கள் பற்றியும் விளக்கி கூறினர்.
கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில்,
முதுகலை ஆசிரியர் எ.ராஜ்குமார், ஓவிய ஆசிரியர் பார்த்தீபன், எய்டு இந்தியா திட்ட பயிற்றுநர் புருஷோத்தமன், ஆசிரியை சுவேதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் மாணவர்களுக்கு கை கழுவும் முறைகள் பற்றிய செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இதில் சுமார் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.