எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக வில் இணைந்த,பிற கட்சிகளை சேர்ந்த தி.மலை மாவட்ட நிர்வாகிகள்!
எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுக வில் இணைந்த,பிற கட்சிகளை சேர்ந்த தி.மலை மாவட்ட நிர்வாகிகள்!
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுப் புற கிராமங்களை சேர்ந்த திமுக பாமக தேமுதிக அமமுக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 500 பேர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தூசி கே மோகன் மு எம்எல்ஏ தலைமையில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான, எடப்பாடி கே பழனிசாமி முன்னிலையில் அதிமுக வில் இணைந்தனர்
முன்னதாக வடக்கு மாவட்ட கழக இணைச்செயலாளர் விமலா மகேந்திரன் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் ஏற்பாட்டில் திமுக பாமக தேமுதிக அமமுக கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் 500 பேர் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு பேருந்துகளில் செய்யாறிலிருந்து புறப்பட்டனர் ” புரட்சித் தலைவி அம்மா வின் புகழ் ஓங்குக! கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் வாழ்க! ” என கோஷமிட்டபடி சென்னையை நோக்கி விரைந்தனர்
இன்று மாலை எடப்பாடி கே. பழனிசாமி இல்லத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என். சுப்பிரமணியன் சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான, எடப்பாடி கே.பழனிசாமி க்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களை அதிமுக வில் இணைத்துக் கொண்டனர் உடன் கலசபாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்