28 தொகுதி ரொம்ப முக்கியம்! பெங்களூரில் ராகுல்-பிரியங்கா இன்று தீவிர பிரசாரம்!
28 தொகுதி ரொம்ப முக்கியம்! பெங்களூரில் ராகுல்-பிரியங்கா இன்று தீவிர பிரசாரம்!
கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்க ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் 10 ம் தேதி நடைபெற உள்ளது.
மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.
அதன்பிறகு மே 13 ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நேற்று சோனியா காந்தி தார்வார் மாவட்டம் உப்பள்ளி பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்கள் கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
பெங்களூர் நகரில் இன்று ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
பெங்களூரில் 28 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் மற்றும் பேரணிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை
பெங்களூர் புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் ராகுல் காந்தி தெருமுனை பிரசார கூட்டத்தில் பேசுகிறார்
அதைத்தொடர்ந்து புலிகேசிநகரில் தெருமுனை பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அதேபோல் பிரியங்கா காந்தி பெங்களூர் மகாதேபுராவில் திறந்த வாகனத்தில் பேரணியில் செல்கிறார்.
அதன்பிறகு இரவு 7 மணிக்கு பெங்களூர் தெற்கு பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
அதன்பிறகு இரவு 8.30 மணிக்கு பெங்களூர் சிவாஜிநகரில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இணைந்து பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர்.
இதனால் பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளில் ஏராளமான பிற மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள், நிர்வாகிகள், குவிந்து உள்ளனர்.
இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது
இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரின் பிரசார நிகழ்ச்சிகளால் பெங்களூரில் 11 முக்கிய இடங்களை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும் என பெங்களூர் மாநக போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.