செய்யாறு: வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்யாறு: வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அலுவலகம் எதிரே தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வட்டத் தலைவர் ஆர் சேகர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசானை 33 -ஐ ரத்து செய்ய கோரியும், கிராம உதவியாளர்களுக்கு ஊதியம் 15,100 வழங்கவேண்டும்
வருவாய் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 1927 கிராம உதவியாளர் பணியிடங்களை போர் கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும்
கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பெற 10 ஆண்டுகள் என்பதை அவர்களுக்கு வழங்குவது போலவே 6 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு வந்தவாசி நிர்வாகிகள் கோஷமிட்டனர்
மாநில துணைத் தலைவர் பிரபாகரன் சிறப்புரையாற்றினார்
மாவட்ட செயலாளர் வடிவேல் துணைச்செயலாளர் வாசு முன்னிலை வகிக்க, மாவட்ட தலைவர் வெங்கடேசன் விளக்கயுரையாற்றினார்
கணபதி வரவேற்புரையாற்ற, வட்டத் துணைத் தலைவர் இளங்கோ நன்றியுரையாற்றினார்
இந் நிகழ்வில்,மாவட்ட பொருளாளர் பிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி பொறுப்பாளர்கள், வந்தவாசி செய்யாற்றை சேர்ந்த நூற்றுக்கும்
மேற்பட்டோர் கலந்து கொண்டனர்