வந்தவாசி: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: விழாவில் வலியுறுத்தல்!
வந்தவாசி: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்: விழாவில் வலியுறுத்தல்!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி மற்றும் வினாடி வினா நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு தெள்ளார் வட்டார கல்வி அலுவலர் தே. ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் வரவேற்றார்.
ஓவிய ஆசிரியர் பெ. பார்த்திபன், தமிழாசிரியர் எம். பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் தமிழ்ச் செம்மல் பாவலர் ப. குப்பன் அவர்கள் பங்கேற்று, மாணவர்களின் திருக்குறள் ஒப்பித்தல் நிகழ்வை பாராட்டி பேசினார்.
மேலும் திருக்குறளின் மேன்மையும், திருக்குறள் காட்டும் அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளையும் ஒப்பிட்டு விளக்கிப் பேசினார்.
உலக பொதுமறை நூல் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், பள்ளிகளில் திருக்குறள் வகுப்பிற்கு என தனிப் பாடவேளையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ், ஆசிரியை சுவேதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.