திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்ப்பதற்கான ஜமாபந்தி துவக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வட்டங்களிலும் வருவாய் தீா்வாய கணக்குகளை சரிபாா்ப்பதற்கான ஜமாபந்தி துவக்கம்
தண்டராம்பட்டு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது. முதல் நாளான நேற்று தண்டராம்பட்டு உள் வட்டத்துக்குட்பட்ட 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதள் , பட்டா மாறுதல் உள்பட வருவாய்த் துறை தொடா்பான 411 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பா.முருகேஷ் பெற்றுக்கொண்டாா்.
இவற்றில் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஒரு மனுவின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு பயனாளிக்கு பட்டா மாறுதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் வழங்கினாா்.
மேலும், 18 கிராமங்களுக்கான வருவாய் தீா்வாய கணக்குகளையும் ஆட்சியா் சரிபாா்த்து, ஆய்வு செய்தாா்.
நிகழ்ச்சியில் தண்டராம்பட்டு வட்டாட்சியா் ஒய்.அப்துல் ரகூப், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சக்கரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருவண்ணாமலை: மாவட்ட வருவாய் அலுவலா் மு.பிரியதா்ஷினி தலைமையில் ஜமாபந்தி தொடங்கியது.
முதல் நாளான நேற்று நாயுடுமங்கலம் வருவாய் உள் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்களது வருவாய்த் துறை தொடா்பான குறைகள், கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 103 மனுக்களை அளித்தனா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வட்டாட்சியா் எஸ்.சரளா, வட்ட வழங்கல் அலுவலா் பி.முருகன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பரிமளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி: வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்திக்கு மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கோ.வெங்கடேசன் தலைமை வகித்து, மழையூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்ததுடன், அந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றாா்.
வந்தவாசி வட்டாட்சியா்கள் கி.ராஜேந்திரன், சுபாஷ்சந்தா் மற்றும் துணை வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த ஜமாபந்தி வருகிற ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
போளூா்: போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெற்றிவேல் தலைமை வகித்து, போளூா் உள்வட்டத்தைச் சோ்ந்த கிராமங்களின் கணக்குகளை தணிக்கை செய்ததுடன், அந்தக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களையும் பெற்றாா்.
வட்டாட்சியா் சஜேஷ்பாபு, தனி வட்டாட்சியா் செந்தில்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் தட்ஷணாமூா்த்தி, வருவாய் ஆய்வாளா் கலையரசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.