வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
நேற்றைய தினம் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை திமுக குண்டர்கள் அடித்து விரட்டியதுடன், அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான பெண் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை காட்டுவதாக சாடியுள்ளார்.
மேலும், ஆளும் கட்சியினருக்கு கைக்கட்டி சேவகம் செய்யும் ஒருசில காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.