இதற்காவது பதில் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி
இதற்காவது பதில் வருமா? அமைச்சர் உதயநிதிக்கு அண்ணாமலை கேள்வி
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?’
‘நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன? இதற்காவது பதில் வருமா?’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து டுவிட்டரில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் 1000 கோடி ரூபாய் முதலீடு குறித்த கேள்வியை எழுப்பியிருந்தோம்.
முதலீடும் வரவில்லை முறைகேடான முதலீடு என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று வரை பதிலும் வரவில்லை.
முறைகேடான பணப்பரிவர்த்தனை மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அமலாக்கத் துறையிடம் சிக்கியுள்ளது.
நோபல் ப்ரிக்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அதே விலாசத்தில் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை இயங்கி வருகிறது.
இந்த இரு நிறுவனங்களுக்கு உள்ள தொடர்பு என்ன?
இதற்காவது பதில் வருமா? என அந்தப் பதிவில் அண்ணாமலை கேட்டுள்ளார்.
முன்னதாக, உதயநிதியின் மனைவியும் திரைப்பட இயக்குநருமான கிருத்திகா உதயநிதியின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு அசையா சொத்துக்களை அமலாக்கத் துறை தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது.
இதன் மதிப்பு ரூ. 36.3 கோடி. அதன்படி அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகாவின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.34.7 லட்சம் ரொக்கமும் முடக்கப்பட்டுள்ளது.
மேலும் கிருத்திகாவின் ரூ.36.3 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. உதயநிதி அறக்கட்டளைக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உதயநிதி அறக்கட்டளை தொடர்புடைய 8 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இது தொடர்பாக உதயநிதி அறக்கட்டளை நிர்வாகியும் வழக்கறிஞரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
இந்த நிலையில் அமைச்சர் கிருத்திகா உதயநிதியின், 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனை இரண்டாவது நாளாக தற்போது கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் உள்ள ரொக்கத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.