காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!
காயிதே மில்லத் 128 வது பிறந்த தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதே மில்லத் அவர்களின் 128-வது பிறந்தநாள் கல்வி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது
இதை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை கே.ஏ.வகாப் திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வடக்கு மாவட்ட தலைவர் டி.எம்.பீர் முகமது தலைமையில் நடைபெற்றது.
வந்தவாசி பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஆதம் மௌலானா துவா ஓதி துவங்கி வைத்தார்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏ. அப்துல் வகாப், காதர் ஒலி, ஹபிபுல்லா, முன்னாள் நிர்வாகி அக்பர் முன்னிலை வகித்தனர்.
நகர செயலாளர் ஜே.மன்சூர் அலி வரவேற்பு உரையாற்றினார்.
இந் நிகழ்வில், அப்துல் காதர், இமாம் இஸ்மாயில்,உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.
100 மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது. நகர துணைத் தலைவர் அப்துல் வாகித் நன்றி உரையாற்றினார்.