நாகூர் தர்கா: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கள ஆய்வு!
நாகூர் தர்கா: அமைச்சர் செஞ்சி மஸ்தான் கள ஆய்வு!
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் ஹஜ்ரத் செய்யது முஹம்மது யூசுப் சாஹிப் (ரலி) வருடாந்திர உருஸ் நடைபெற்று வருகிறது.
இந்த வைபவத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நாகூர் தர்கா சின்ன ஆண்டகை கந்தூரி விழாவில் கலந்து கொண்டு அனைத்து மக்களு க்காகவும், தமிழக முதல்வருக்காகவும் பிரார்த்தனை (துவா) செய்தார்.
தர்கா மானேஜிங் டிரஸ்டி பாத்திஹா ஓதினார்.
பின்னர் தமிழக அரசு நாகூர் தர்காவுக்கு வழங்கிய பெருமராமத்து பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்.
தர்கா முழுவதும் மேலும் மராமத்து பணி தேவைபடும் இடங்களை பார்வையிட்டார்.
தமிழக அரசு தொடர்ச்சியாக நாகூர் தர்காவிற்க்கு மராமத்து உதவிகள் செய்யும் என கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அரசு நல திட்ட உதவிகளை பற்றி விளக்கினார்.
தர்காவில் நடைபெற்ற இரவு மவுலூத் மஜ்லீஸில் கலந்து கொண்டார்.
நாகூர் தர்கா நிர்வாகம் சார்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கட்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு்களை செய்திருந்தனர்.
நாகூர் தர்கா ஆலோசனைக் குழு தலைவர் கலீபா சாஹிப், தர்கா மானேஜிங் டிரஸ்டி காஜி ஹூசைன் சாஹிப், அரசு ஒப்பந்தகாரர் ஶ்ரீராம் மற்றும் பலர் உடனிருந்தனர்