தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் – முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி அதிமுக தான் – முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றியம் செட்டிமாங்குறிச்சி அம்மன் கோயில் பகுதியில் அதிமுக கொடியை முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஏற்றி வைத்தார்.
அப்போது பேசிய அவர்;
“தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் இருந்தாலும் எடப்பாடி தொகுதிக்கு என்று தனிப்பெருமை உண்டு. ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை சிந்தாமல் சிதறாமல் செய்து முடித்தேன்.
ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் 52 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ படிப்பு சேர்க்கையில் 7.5% இட ஒதுக்கீட்டால் ஏழை, எளிய மாணவர்கள் பயன்பெறுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் 100 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
உலகத்தில் எந்தப் பகுதிக்கு சென்றாலும் தமிழக மாணவர்கள் சிறந்தவர்கள் என்று கூறும் அளவிற்கு இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டது.
அதிமுக ஆட்சியில்தான் மக்கள் சுபிட்சமாக வாழ்ந்தார்கள். தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான்” இவ்வாறு கூறினார்.