தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி, ஹால்டிக்கெட் அருவி அறக்கட்டளை நிறுவனர் ரூபன் வழங்கினார்
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி, ஹால்டிக்கெட் அருவி அறக்கட்டளை நிறுவனர் ரூபன் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 44 மாணவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் அந்த மாணவர்களுக்கான அரசின் உடனடி மறு தேர்வு வரும் செவ்வாய்க்கிழமை 27ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற உள்ளது. அத்தகைய சூழலில் தேர்வு எழுதவுள்ள, தோல்வி அடைந்த மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வழங்கப்பட்டது.
இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
எய்டு இந்தியா திட்ட மேற்பார்வையாளர் க. முருகன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அருவி அறக்கட்டளை நிறுவனர் ஏ.ஜெ. ரூபன் பங்கேற்று பேசினார்.
“தோல்வியே வெற்றிக்கு அடிப்படை. எனவே பல்வேறு காரணங்களால் கடந்த தேர்வில் தோல்வியடைந்த நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று மிகச் சிறந்த சாதனை மாணவர்களாக திகழ்வீர்கள்” என்று வாழ்த்தி பேசினார்.
மேலும் அவர்களுக்கான தேர்வுக்கூட ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. மேலும் பல்திறன் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் மாணவி ரோஜா நன்றி கூறினார்.