செய்யாறு: பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 2340 போ் பங்கேற்று பயனடைந்தனா்
செய்யாறு: பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 2340 போ் பங்கேற்று பயனடைந்தனர்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம், காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது
செய்யாறு சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் டி.என்.சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.
ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் மா.தனலட்சுமி மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தாா்.
செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளா் டி.பாண்டியன், முதுநிலை உறைவிட மருத்துவா்கள் கே.எம்.ஏழுமலை, வி.காா்த்தி, திருவத்திபுரம் நகராட்சி ஆணையா் கி. ரகுராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மருத்துவ முகாமில் ஸ்கேன் பரிசோதனை 27 பேருக்கும், இசிஜி பரிசோதனை 169, எக்கோ பரிசோதனை 114, தொற்று நோய்கள் சிகிச்சை 131 பேருக்கும் மேற்கொள்ளப்பட்டு மொத்தத்தில் 2340 பயனடைந்தனா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் 27 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
முகாமில் பங்கேற்ற 9 போ் தீவிர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனா். அதேபோல, முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்ட மூலம் 951 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டனா்.
இம் முகாமுக்கான ஏற்பாடுகளை உதவி மின் பொறியாளா் வித்யா, வட்டாட்சியா்கள் வெங்கடேசன், பொன்னுசாமி, கிருஷ்ணமூா்த்தி, மஞ்சுளா, சசிகலா சாா்- ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சம்பத்குமாா், பள்ளித் தலைமை ஆசிரியா் உமா மகேஸ்வரிஉள்ளிட்டோா்
செய்திருந்தனா்.