எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செயற்கைகோள் வடிவமைப்பு பயிற்சிக்கு ஒப்பந்தம்
எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மற்றும் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் செயற்கைகோள் வடிவமைப்பு பயிற்சிக்கு ஒப்பந்தம்
செங்கல்பட்டு அடுத்த நந்திவரம் கூடுவாஞ்சேரி எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி
மாணவர்களுக்கு தகவல் தொடர்பு சம்மந்தமான செயற்கைகோள் வடிவமைக்க பயிற்சி அளித்து செயற்கைகோள் உருவாக்கி விண்ணில் நிலை நிறுத்த எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் தாளாளர் எம். சுப்ரமணியன் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் முனைவர் ஸ்ரீமதி கேசன் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் இயங்கிவரும் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி 2017 ம் ஆண்டு 700 மாணவ, மாணவியருடன் தொடங்கப்பட்டு தற்போது 2,872 மாணவ,மாணவியர் படிக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
இப்பள்ளியில் கிரேடு 1வகுப்பு முதல் மாணவர்களுக்கு வழக்கமான பாடத்திட்டத்துடன் “STEAM” எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் கணிதம் சம்மந்தமான பாடங்களும் போதிக்க உள்ளதாக பள்ளியின் தாளாளர் எம். சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் உலக அளவில் தேவைகளுக்கான தொழில்நுட்பங்கள் உருவாக்க திறன் வளர்ப்பு,படைக்கும் திறன்,21ம் நூற்றாண்டிற்கான திரன்கள், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி,ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு,மெய் மற்றும் மெய்நிகர்க்கான நிஜத்தினை பெரிதாக்குதல்,3d முப்பரிமான பிரின்டிங் இயந்திரம் பற்றியும் இனி வரும் காலங்களில் பயிற்றுவிக்க உள்ளதாகவும்,
எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் இஸ்ரோ. எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் தொலைதொடர்பு வளர்ச்சிக்கான 5 கிலோ எடை கொண்ட செயற்கைகோள் ஒன்றை வடிவமைத்து அதனை விண்ணில் செலுத்தி கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் பணியில் ஈடுபட உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.
இந்த பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனம் பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியும்,ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் முனைவர் ஸ்ரீமதி கேசன் மற்றும் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் தாளாளர் எம். சுப்ரமணியன் ஆகியோர் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையொப்பமிட்டு ஒப்பந்தத்தை பரிமாறிகொண்டனர்.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் முனைவர் ஸ்ரீமதி கேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
நாட்டில் உள்ள மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதனை செயல்படுத்தும் வகையில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியினை எங்கள் நிறுவனம் செய்து வருகிறது.
இந்த செயற்கைகோள் வடிவமைப்பு பணியில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் 8 முதல்10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 15 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு செயற்கைகோள் பயிற்சி அளிக்கப்படும்.வடிவமைக்கப்பட்ட செயற்கைகோள் எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் இந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம்(2024) இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் ராக்கெட் தளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டு கிரக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றார்.
இந் நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியின் ஆலோசகர் முனைவர் கே. ஆர். மாலதி, முதல்வர் எஸ். புவனேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.