இஸ்லாமியர்களை நிற்க வைத்த எம்.ஆர்.கே; மாமன்னன் பேசும் சமத்துவம் என்ன ஆனது? சீமான் கேள்வி
இஸ்லாமியர்களை நிற்க வைத்த எம்.ஆர்.கே; மாமன்னன் பேசும் சமத்துவம் என்ன ஆனது? சீமான் கேள்வி
“இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை” – சீமான்
தற்போது வெளியாகியுள்ள “மாமன்னன்” திரைப்படத்தில் தெரிவித்துள்ள கருத்திற்கு முரணாக அமைச்சர் எம்.ஆர்.கே.செல்வம் நடந்துகொண்டதால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தைப்பற்றி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
“சமூகநீதி காவலர்கள் என்று தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சருமான ஐயா எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் தான் மட்டும் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, தம்மை சந்திக்க வந்த பரங்கிபேட்டை ஜமாத்தை சேர்ந்த இசுலாமிய பிரதிநிதிகளை நாற்காலிகள் இருந்தும் நிற்கவைத்தே பேசி அனுப்பியுள்ளார்.
இதுதான் திமுக கடைபிடிக்கும் சமத்துவமா? இசுலாமியப் பெருமக்களை வெறும் வாக்கு வங்கிகளாக இன்னும் எத்தனை காலத்திற்கு திமுக ஏமாற்றபோகிறது?
இசுலாமியர்களின் வாக்கு வேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமை வேண்டாமா? நீண்டகால இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இசுலாமியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தையும் கொடுக்கவில்லை. குறைந்தபட்சம் இசுலாமிய பிரதிநிதிகளை சமமாக உட்கார வைக்கக்கூட மனமில்லையா? “கடைப்பிடிக்கமுடியாத சூழ்நிலையிலும் கடைப்பிடிப்பதற்கு பெயர்தான் மாண்பு”, என்று தெரிவித்துள்ளார்.