வந்தவாசி: ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
வந்தவாசி: ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா!
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் சார்பில் காமராசர் பிறந்தநாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
வந்தவாசி அடுத்த அம்மையப்பட்டு வட்டார வள மையத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பகல் நேர பள்ளி மாணவர்கள் மத்தியில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார்.
அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.பள்ளி தலைமை ஆசிரியர் பெ. ரேவதி வரவேற்றார்.
வட்டார வள மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வி. மீனா, பூங்குயில் பதிப்பகம் ஆசிரியர் டி.எல். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கவிஞர் மா. கதிரொளி பங்கேற்று, “காமராசரின் பண்பு நலன்கள்” பற்றி விளக்கி பேசினார்.
மேலும் கவிஞர் தமிழ்ராசா, எய்டு இந்தியா திட்ட மேலாளர் க. முருகன், ஆசிரியை வாலண்டினா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இறுதியில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பராமரிப்பு பொறுப்பாளர் சல்சா நன்றி கூறினார். அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.