ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் : வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பம் பெறலாம் – மேயர் பிரியா
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டம் : வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பம் பெறலாம் -மேயர்பிரியா
கலைஞர் மகளிர் திட்டம் தொடர்பாக சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் விண்ணப்பங்களை பெற 24 ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கை 2023 -2024 ல்- கல்வித்துறைக்கென 27 அறிவிப்புகளை வெளியிட்டது
அதில் சுமார் 12 அறிவிப்புகளின் செயல்பாடுகளை இன்று தொடங்கிவைத்த பின்பு செய்தியாளர்களிடம் பேசினார் மேயர் பிரியா,
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு இசை கருவி வாசிப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இனி ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களுக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் வாரம் ஒரு முறை மகிழ்ச்சி வகுப்பறை (happy class) தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் spoken English வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு மாதத்திற்குள் பள்ளிகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
1,415 நியாய விலைக் கடைகளில் தன்னார்வலர்கள் நியமித்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சியில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக விண்ணப்பங்களை பெற 24 ம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெறும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் சுமார் 3,200 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் எனவும் அவர் மேலும் கூறினார்.