பாஜக வை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகள்! மெகா கூட்டணியின் பெயர் ” india”
பாஜக வை வீழ்த்த ஓரணியில் திரண்டுள்ள எதிர் க்கட்சிகள்!
மெகா கூட்டணியின் பெயர் ” india”
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில் எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் இணைந்தால் மட்டுமே பாஜகவை எதிர்க்க முடியும் என்று கருதி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஈடுபட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை நிதிஷ்குமார் நடத்தினார்.
இதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஒருங்கிணைந்த ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவ சேனா, சமாஜ்வாடி கட்சி, ராஷ்டிரிய லோக் தளம், அப்னா தளம், ஜம்மு காஷ்மீர் தேசிய காங்கிரஸ், பிடிபி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.
இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான அஜெண்டாவை அறிவித்தார்.
அப்போது பேசிய அவர், “காங்கிரஸுக்கு அதிகாரத்திலோ, பிரதமர் பதவியிலோ ஆர்வம் இல்லை என்று ஸ்டாலினின் பிறந்தநாளில் நான் ஏற்கனவே சென்னையில் கூறியிருந்தேன். இந்த சந்திப்பில் எங்களின் நோக்கம் நமக்கான அதிகாரத்தை பெறுவது அல்ல. இது நமது அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகியவற்றைப் பாதுகாப்பதாகும்” என்று தெரிவித்தார்.
இந் நிலையில் திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 36 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு இந்தியா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது INDIA – Indian national demcratic inclusive alliance என்று பெயரிட்டுள்ளன. இந்திய தேசிய ஜனநாயக உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிடப்பட்டுள்ளது.