திருத்துறைப்பூண்டி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
திருத்துறைப்பூண்டி: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மணிப்பூா் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
மாநில குழு உறுப்பினர் ஐவி. நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில்,
மணிப்பூா் மாநில அரசு உடனடியாக பதவி விலக வேண்டுமென கண்டன முழக்கங்களை எழுப்பினர் இதைத் தொடர்ந்து பிரதமா் மோடியின் உருவ பொம்மையை எரித்தனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் காரல்மாா்க்ஸ், வடக்கு ஒன்றிய செயலாளா் கதிரேசன், நகர செயலாளா் கே. கோபு, கோட்டூா் ஒன்றிய செயலாளா் எல்.சண்முகம், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளா் கே. பழனிச்சாமி, நகர செயலாளா் சி. செல்லத்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பிரதமா் உருவ பொம்மை எரிப்பு தொடா்பாக திருத்துறைப்பூண்டி போலீஸாா் 55 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.