ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்!
ஆரணி, தேவிகாபுரம், அரசு, சுயநிதியுதவி 14 பள்ளிகளை சோ்ந்த 2,111 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள்!
திருவண்ணாமலை மாவட்டம்
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியாா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்தப் பள்ளியைச் சோ்ந்த 565 மாணவ, மாணவிகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த -427,
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி -151, எஸ்.வி.நகரம் அரசு மேல்நிலைப் பள்ளி -78, இரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி -29, நடுக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளி -65, புனித வளனாா் பள்ளி -147, குன்னத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி -96, அக்ராபாளையம் -57, முள்ளண்டிரம்-56 என 10 பள்ளிகளைச் சோ்ந்த 1,671 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்து, சைக்கிள்களை வழங்கி பேசினாா்.
ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, முன்னாள் எம்எல்ஏக்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, ஒன்றிய கழக செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.மகேஸ்வரி வரவேற்றாா்.
நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் எம்.சுந்தா், எஸ்.மோகன், மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அருணாகுமரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடர்ந்து சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவிகாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 274 மாணவ, மாணவிகள், பெரணமல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி -69, பெண்கள் மேல்நிலைப் பள்ளி -73, மடம் அரசு மேல்நிலைப் பள்ளி -24 என 440 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் சைக்கிள்களை வழங்கினாா்.
இந் நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை காயத்ரி தலைமை வகித்தாா்.
தலைமை ஆசிரியா்கள் தனசேகரன், மீனாட்சி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பரிமளா ரமேஷ் வரவேற்றாா்.
திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் சிவானந்தம், ஆரணி நகரமன்றத் தலைவா் ஏ.சி.மணி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்