வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்!
வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்கம்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில், வேலை வாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் பிரிவு, உள்தர மதிப்பீட்டு பிரிவு சாா்பில் கருத்தரங்கு நடைபெற்றது
இக் கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் சி.ருக்மணி தலைமை வகித்தாா்.
கல்லூரி நிறுவனா் பி.முனி ரத்தினம், கல்லூரிச் செயலாளர் எம்.ரமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்வில், ‘தொழிலில் தயாா் நிலை’ என்ற தலைப்பில் சென்னை ஐசிடி அகாடமியின் இணை துணைத் தலைவா் ஜி.சரவணன், மேலாளா் ஜெ.ஜெய்ரூஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
அப்போது, தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள், அரசு வழங்கும் நிதியுதவிகள் உள்ளிட்டவை குறித்து மாணவிகளுக்கு விளக்கினா்.
நிகழ்ச்சியை, கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கி.வான்மதி செல்வி தொகுத்து வழங்கினாா்.
முன்னதாக, கல்லூரி வேதியியல் துறைத் தலைவா் எ.ஷோபா வரவேற்றாா்.
இறுதியில் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவா் எஸ்.சுஜாதா நன்றி கூறினாா்.