திமுக இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவித்தால், வேட்பாளர்களை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்’ – சீமான்.
திமுக இஸ்லாமிய சிறை கைதிகளை விடுவித்தால், வேட்பாளர்களை திரும்ப பெற்றுக் கொள்கின்றேன்- சீமான்
அண்ணா பிறந்த நாளில் சிறையில் உள்ள இஸ்லாமியை கைதிகளை விடுவித்தால், திமுக போட்டியிடும் தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கோவை ,சித்தாபுதூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய அவர்,
“மக்களின் நலனுக்காகவும் ,வாழ்வுக்காகவும் சிறை செல்ல தயார் என்றும் நாம் தமிழர் ஆட்சிக்கு வரும்போது எப்படி வடமாநிலத்தவர்கள் வந்தோர்களோ அப்படியே திரும்பி செல்வார்கள் எனத்தெரிவித்தார்.
அதேபோல் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது ஆளுநர் கையெழுத்துப்
போடவில்லையென்றால் அவரது வீட்டை காலி செய்ய வைத்து டெல்லிக்கு அனுப்பிவிடுவோம் என்றும் ஓசி சோறு சாப்பிடுகின்ற நியமன பதவியில் இருக்கும் ஆளுநருக்கு அவ்வளவு இருந்தால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எவ்வளவு இருக்கும். உனக்கு எதற்கு இத்தனை ஏக்கரில் பங்களா என்று சொல்லி காலி செய்ய வைத்துவிடுவோம்” என அவர் தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்: “குறிப்பாக போர் ஆரம்பித்துவிட்டது அது 2026- ல் தெரியும் நீங்கள் தமிழர்களாக இருந்தால் என்னோடு வாருங்கள். திராவிடனாக இருந்தால் எவனோடும் போங்கள் சீமான், முரசு கொட்டியாச்சு,போர் துவங்கியாச்சு. 2026 – ல் வெற்றியோடு போரைக் நிறுத்துவோம். யாரை நம்பியும் நாம் தமிழர் கட்சியில்லை
மேலும் எனக்கு யாரும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி எனத்தெரிவித்த சீமான்,
நான் யாரிடமும் சமரசம் செய்ய மாட்டேன் எனக்கு பாராளுமன்ற கனவு இல்லை.
தமிழ் தேசியமே எனது கனவு ராமேஸ்வரத்தில் மோடியை எதிர்த்து திமுக, உதயசூரியன் சின்னத்தில் அந்த தொகுதியில் நின்றால் திமுகவை நாம் தமிழர் கட்சி அந்த தொகுதியில் மட்டும் ஆதரிக்கும்.
அதேபோல இஸ்லாமிய சிறை கைதிகளை திமுக அண்ணா பிறந்த நாளான்று விடுவித்தால் 40 தொகுதியில் திமுக போட்டியிடும் தொகுதியில் மட்டும் எனது வேட்பாளர்களை திரும்ப பெற்று கொள்வேன் என்று தெரிவித்த அவர், ஆனால் என் இனத்தை கொன்று குவித்த காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் நான்
போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் என் இனத்திற்க்கு காவிரி தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸோடு தொகுதி பங்கீடு செய்யாமல் அவர்களோடு போட்டியிட திமுக மறுக்குமானால், அனைத்து தொகுதியிலும் திமுகவை ஆதரிப்பேன்” என்றும் சீமான் தெரிவித்தார்.