கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெற்ற பாரதியார் நினைவு தின விழா!
வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்கம் சார்பில் வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கான பாரதியார் நினைவு தின சிறப்பு பேச்சரங்கம் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியை சு.கண்ணகி தலைமை தாங்கினார்.
தமிழ்ச் சங்க நிர்வாகிகள் வந்தை பிரேம், ஸ்ரீமந்த், முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க செயலாளர் எம்.பி.வெங்கடேசன் வரவேற்றார்.
பாரதியார் வேடமிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றையும், தமிழ் ஈடுபாடு பற்றியும் கவிதைகளாக மாணவர்கள் பேசினர்.
அவர்களுக்கு கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.
மேலும் நடைபெற்ற நிகழ்வில் துணைத் தலைவர் பா.சீனிவாசன் பாரதி கண்ட பாரதம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
தமிழ்ச் சங்க துணை செயலாளர் தமிழ்ராசா பாரதியார் சேர்ந்திசை பாடல்களை மாணவர்களுடன் இணைந்து பாடினார்.
மேலும் பாரதியார் நினைவு தின கவிதை சாரலை பள்ளி ஆசிரியையும், சங்க துணைச் செயலாளருமான சா.ரஷீனா ராகத்துடன் வாசித்தார்.
நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் தனசேகரன், காவல்துறை கதிரொளி ஆகியோர் பங்கேற்றனர். இறுதியில் சங்க நிர்வாகி அ. ரஷீத் கான் நன்றியுரையாற்றினார்.