பாசிச பாஜகவை விரட்டும் வேளையில் முதலில் கவனமாக இருப்போம்.! – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசுகையில் சனாதன கொள்கை என்பது டெங்கு, மலேரியா, கொரானா போல ஒழிக்கப்பட வேண்டும் என பேசிய கருத்துக்கள் தற்போது வரை இந்திய அரசியலில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
இதுபற்றி கருத்துக்களை மீண்டும் மீண்டும் கூறி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினே போதும் என கூறிவிட்டார்.
சனாதன எதிர்ப்பு என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் அதனை வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களை பாஜக மறைக்க முயற்சிக்கிறது எனவே அதனை பற்றி பேசுவோம் என செய்தியாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் அமைச்சர் உதயநிதி.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ,
ஒரு செய்தியாளர் சனாதனம் பற்றி கேட்டவுடன், தற்போது சனாதனம் பற்றி பேசுவதை விட்டுவிடுங்கள். நான் இங்கேயே தான் இருக்க போகிறேன். அதனை பிறகு விவாதித்து கொள்ளலாம். சிஏஜி அறிக்கையின் படி வெளியான 7.5 லட்சம் கோடி ஊழலை பற்றி பேசுவோம் என கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், சனாதனத்தை கடந்த 200 வருடங்களாக நாம் எதிர்த்து வருகிறோம். அதனை பிறகு பார்த்துக்கொள்ளலாம். தற்போது பாசிச பாஜகவை ஆட்சி பொறுப்பில் இருந்து விரட்ட வேண்டும். அதில் தான் நமது கவனம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டு பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஏற்கனவே உத்திர பிரதேசத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் தலைவிக்கு 10 கோடி ருபாய் அறிவித்து பெரும் சர்ச்சையானதை தொடர்ந்து, நேற்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஒரு விழாவில் பேசுகையில், சனாதனத்தை எதிர்ப்பவர்கள் நாக்கை அறுக்க வேண்டும் என பேசியிருந்தார். மேலும் அவர்கள் கண்களை பிடுங்க வேண்டும் எனவும் பேசியிருந்தார்