நாகை – டூ- இலங்கை அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து – அமைச்சர் எ.வ.வேலு!
நாகை – டூ- இலங்கை அக்டோபர் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து – அமைச்சர் எ.வ.வேலு!
நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.
நாகை துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் எவ வேலு இதனை தெரிவித்தார்.
நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அமைச்சர் எவ வேலு தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கும் பணி கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்ற பிறகு கடந்த ஜூலை மாதம் முதல் முறையாக இந்தியா வந்தார்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
அப்போது இருநாட்டு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது யுபிஐ பணப்பரிவர்த்தனையை இலங்கையில் செயல்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கும் இடையே கையேழுத்தாயின.
தமிழகத்தின் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நாகை துறைமுகத்தில் ஏற்கனவே நடைபெற்று வரும் பயணிகள் முனையம் மற்றும் சுங்க அலுவலகம் ஆகியவை அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டது.
இந் நிலையில் தமிழக அமைச்சர் எ.வ. வேலு, நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் உள்ள காங்கேச துறைமுகத்திற்கு விரைவு பயணியர் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதற்கான பணிகள் தமிழ்நாடு கடல்சார் வாரியம், மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து துறை மற்றும் வெளியுறவுத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மத்திய அரசின் இந்திய கப்பல் போக்குவரத்து கழகம் விரைவு பயணிகள் கப்பல் போக்குவரத்தை நாகை துறைமுகத்தில் இருந்து இயக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த விரைவு பயணிகள் கப்பல் 150 பேர் பயணிக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். இந்த பயணியர் கப்பல் போக்குவரத்து வெளிநாட்டு பயணம் என்பதால் மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் கையாள மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எவ வேலு தெரிவித்தார்.
மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் சென்று வரும் வகையில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், தமிழ்நாடு அரசுடன் இணைந்து பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் எவ வேலு தெரிவித்தார்.
நாகை மற்றும் இலங்கை இடையே தொடங்கப்படும் கப்பல் போக்குவரத்து மூலம் இலங்கை தமிழ் மக்கள் தங்களின் கல்வி, மருத்துவம், உணவு பொருட்கள் மற்றும் வணிக ரீதியில் பெரும் பயன் பெற முடியும் என்றும் தமிழகத்தில் ஆன்மீகம் மற்றும் சுற்றுலாத்துறைகள் பொருளாதார ரீதியாக பெரிய வளர்ச்சியை காண முடியும் என்றும அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமின்றி தமிழக மக்களும் இந்த கப்பல் போக்குவரத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
தமிழ்நாடு – இலங்கை இடையே ஏற்கனவே கப்பல் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் இருந்த ஒன்றுதான். இடையில் நிறுத்தப்பட்ட அந்த போக்குவரத்து தற்போது மீண்டும் புதுப்பிக்கப்பட உள்ளது.
வரும் அக்டோபர் மாதம் முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கபடவுள்ளது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மெல்ல மீண்டு வரும் இலங்கைக்கும் இந்த கப்பல் போக்குவரத்து சேவை பெரும் பயன் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது