FEATURED

வந்தவாசியில் விநாயகர் ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

வந்தவாசியில் வெகு விமரிசையாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

வந்தவாசி அங்காளம்மன் கோவில் திடலில் மாம்பட்டு சக்தி உபாசகர் அருட்சக்தி ஆறு.‌ லட்சுமணன் ஸ்வாமிகள் தொடங்கி வைத்த 40 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலை ஊர்வலமானது தேரடி, பஜார் வீதி, அச்சரப்பாக்கம் சாலை வழியாக பூமாலை செட்டிக் குளத்திற்கு சென்று அனைத்து சிலைகளும் கரைக்கப்பட்டது.

முன்னதாக, பழைய பேருந்து நிலையத்தில் இந்து முன்னணி மாநில பொறுப்பாளர் இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார்.

வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் முன்னிலையில், வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் கார்த்திக் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர்: பா.சீனிவாசன்

Please follow and like us:
error
fb-share-icon

vandai times

அ.ஷாகுல்அமீது த/ ஆர்.அப்துல் ஜப்பார் (லேட்) மூத்த பத்திரிகையாளர் ஆகிய நான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் இருக்கின்றேன் Indian federation of small and medium news papers newdelhi அமைப்பின் மாநில இணைச்செயலராக அங்கம் வகிக்கின்றேன் தற்போது vandaitimes blogspot.com new chennai Express.com ஆகிய தமிழ் இணையதளங்களுக்கு ஆசிரியர்- வெளியிட்டாளர் பொறுப்பில் இருந்து வருகின்றேன். தொடர்பிற்கு: 9965887223 editor@newchennaiexpress.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *