கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
கூட்டணி குறித்து முடிவு? நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
பாஜக உடனான கூட்டணி முறிவு விவகாரத்தால் அதிமுகவில் கடந்த சில நாட்களாவே பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ள நிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நாளை அழைப்பு விடுத்துள்ளார்.
கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா குறித்த அண்ணாமலையின் கருத்தால் கொதித்து போன அதிமுக, அண்ணாமலையை கடுமையாக சாடியது. அதோடு, பாஜக கூட்டணியில் தற்போது அதிமுக இல்லை என்றும் தேர்தல் நெருங்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என ஒரேயடியாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்து பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தார்.
தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.
தற்போது அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
இதன்பிறகு பாஜக பற்றி விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமை உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. இதனால், மீண்டும் சமாதான முயற்சி நடப்பதாக சொல்லப்பட்டது.
இருந்தாலும் அப்போதும் அண்ணாமலை பிடிகொடுக்காமல் பதிலடி தந்து கொண்டிருந்தார்.
ஒருகட்டத்தில் செல்லூர் ராஜூ மூலமாக, அதிமுக சமாதானம் செய்ய முயற்சித்தது. பிரதமராக மோடி, முதல்வராக எடப்பாடி பழனிசாமி என்கிற முழக்கத்தை செல்லூர் ராஜூ முன்வைத்தார்.
அதெல்லாம் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க பாஜக ஆதரிக்காது என அப்போது பதில் தந்தார் அண்ணாமலை.
இதனால் கடுப்பாகிப் போன அதிமுக டெல்லியிடம் பஞ்சாயத்து செய்ய முடிவெடுத்தது.
இதனால் அதிமுகவின் வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, சிவி சண்முகம் என ஐந்து தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்திக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அமித்ஷா, அதிமுக தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை எனகூறப்பட்டது.
இதனால் ஜேபி நட்டாவை மட்டும் நேற்று முன் தினம் இரவு அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.
அப்போது அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்பட்ட்டது. இத்தகைய பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அக்கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
நாளை மாலை 4 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி விவகாரத்தில் இன்னும் பஞ்சாயத்து முடியாத சூழலில், நாளை நடைபெறும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்தும் பெற்றுள்ளது. கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.