திருவாரூர்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் கண்காணிப்பு மையம்!
திருவாரூர்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் கண்காணிப்பு மையம்!
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக தரைதளத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை சார்பில் மாவட்ட அளவிலான கர்ப்பிணி தாய்மார்கள் / பச்சிளங்குழந்தைகள் தொடர் கண்காணிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ தலைமை ஏற்று திறந்து வைத்தார்,
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலை வகித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 20024 வரை) 13549 கர்ப்பிணி தாய்மார்கள் இருக்கின்றனர்.
இவர்களில் 6275 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது.
இதில் 6653 காப்பிணி தாய்மார்கள் மிகவும் பாதிப்பு ஏற்படக்கூடிய அளவில் இருக்கின்றனர்.
இவர்களை தினந்தோறும் கண்காணிக்க அவர்களுடைய தொலைபேசி எண்கள் மூலம் அவர்களுக்கு மருத்துவ அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் செவிலியர் மற்றும் பணியாளர்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து தொலைபேசி எண்கள் மூலம் அவர்களுடைய உடல்நலம் விசாரித்து தகுந்த அறிவுரை வழங்கி வருகின்றனர்.
ஏதேனும் திடீர் பாதிப்போ அல்லது சுனக்கமோ ஏற்பட்டால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்துகின்றனர்.
இந் நிகழ்ச்சியில், இணை இயக்குநர் சுகாதாரபணிகள் மரு.ஹேமசந்த்காந்தி, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.