திருவாரூர்: காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு மாநில அளவிலான யோகா போட்டி!
திருவாரூர்: காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு மாநில அளவிலான யோகா போட்டி!
காந்தி ஜெயந்தியினை முன்னிட்டு Feet of Fire அகாடமி சோழ தேச கோப்பை யோகா போட்டியினை நடத்தியது
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், சென்னை உள்ளிட்ட 12 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந் நிகழ்விற்கு, முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சரும், ஆதிதிராவிடர் மற்றும் தமிழக வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு கழகத் தலைவர் உ.மதிவாணன் தலைமை தாங்கினார்.
நகர திமுக செயலாளர் வாரை பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
திருவாரூர் நகரமன்ற உறுப்பினர்கள் ரஜினிசின்னா, வரதராஜன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.
இவர்களை கஸ்தூர்பா காந்தி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரமுருகப்பன், செயலாளர் இன்பராஜ், மேலாளர் சின்னராஜ்
முதல்வர் மலர்விழி இன்பராஜ், அகாடமியை சேர்ந்த இந்துமதி அரவிந்த் ஆகியோர் வரவேற்றனர்.
தமிழக வீட்டு வசதி வாரிய மேம்பாட்டு கழக தலைவர் உ.மதிவாணன் பேசுகையில்:-
“யோகா என்பதை உடலும் மனமும் ஒன்றினைவது என்பதை அனைவரும் அறிவீர்கள் இருப்பினும் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் யோகா செய்தவர் என்றும் அனைவரையும் யோகா செய்ய ஊக்குவிப்பவர் மேலும் மனக்கட்டுப்பாட்டையும், ஒழுங்கு நெறிமுறைகளையும் உண்டாக்கும் யோகாவினை அனைவரும் கட்டாயம் செய்வது அவசியம்” என்று கூறினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் Feet of Fire நிறுவனர்கள் ஈ.பகுத்தறிவு மற்றும் மாஸ்டர் ம.அரவிந்த் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.