இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை!
இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை!
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது
அங்கு வசித்து வரும் புலம் பெயர்ந்த ஏராளமான இந்தியர்களின் குடும்பத்தினர் பதைபதைப்பில் இருந்து வருகின்றனர்.
இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு 24 மணி நேர அவசரகால உதவிக்கு 972-35226748, 972-543278392 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள சுமார் 20,000 இந்தியர்களும் பாதுகாப்பாக அவர்கள் தங்கியுள்ள இடத்திலேயே இருக்க வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இந் நிலையில், பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலும் தீவிரமடைந்துள்ளதால், பாலஸ்தீனத்தில் ரமல்லாவில் உள்ள இந்தியப் பிரதிநிதி அலுவலகம், புலம்பெயர்ந்த இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்கள், அவசர உதவி தேவைப்பட்டால் 0592-916-418 என்ற தொலைபேசி எண்ணிலும், +970-592916418 எண்ணில் வாட்ஸ்அப் வாயிலாகவும், 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், rep.ramallah@mea.gov.in மற்றும் hoc.ramallah@mea.gov.in ஆகிய இமெயில் மூலம் தொடர்புகொண்டு உதவியை பெறலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய பிரதிநிதி அலுவலக தொலைபேசி எண்களிலும் 00970-2-2903033/4/6 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் நிலைமையை கண்காணித்து வருகிறது.
கட்டுப்பாட்டு அறைக்கான போன் எண்கள் 1800118797 (கட்டணம் இலவசம்), +91-11 23012113, +91-11-23014104, +91-11-23017905 மற்றும் +919968291988 மற்றும் மின்னஞ்சல் ஐடி situation@inme.gov. இந்திய தூதரகத்தின் 24 மணி நேர அவசர உதவி எண்ணை +972-35226748 மற்றும் +972-543278392 ஆகிய எண்களிலும் cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.