காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறி! தங்களது குடிமக்களை வெளியேற்றியது இஸ்ரேல்
காஸா பகுதிக்குள் தரைவழித் தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்த அறிகுறி! தங்களது குடி மக்களை வெளியேற்றியது இஸ்ரேல்
லெபனான் எல்லைப் பகுதிகளில் இருந்து பாதுகாப்பான வேறு இடங்களுக்கு தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியது.
காஸா, லெபானான் எல்லைப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் அகற்றம் இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
காஸா மற்றும் லெபனான் எல்லையொட்டி அமைந்துள்ள பகுதிகளிலிருந்து இஸ்ரேலியா்களை பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு வெளியேற்றியுள்ளோம்.
லெபனான் எல்லையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோா் வசிக்கும் கிா்யாத் நகரிலிருந்து அனைவரையும் வேறு இடங்களுக்கு வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம்.
எல்லைக்கு அப்பாலிருந்து வீசப்பட்ட ஏவுகணைத் தாக்குதல் காரணமாக அந்த நகரில் 5 வயது சிறுமி உள்பட 3 இஸ்ரேலியா்கள் காயமடைந்தனா் என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறின.
இஸ்ரேலின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, நீண்ட தொலைவு ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத பலம் வாய்ந்த படையைக் கொண்டுள்ளது.
ஹமாஸை ஒழிக்க இஸ்ரேல் முயன்றால், அந்த நாட்டை எதிா்த்துப் போரிடப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்துள்ளது.
குறிப்பிடத்தக்க ராணுவ பலத்தைக் கொண்டிருக்கும், இஸ்ரேலின் தீவிர எதிரி நாடான ஈரான் இந்த இரு அமைப்புகளுக்குமே ஆதரவு அளித்து வருகிறது.
எனவே, காஸாவுக்குள் நுழைந்து இஸ்ரேல் படையினா் தாக்குதல் நடத்தினால், வடக்கு எல்லை வழியாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரையும், ஈரான் ராணுவத்தையும் அனுப்பும்
முன்னதாக, ‘காஸாவை இதுவரை வெளியிலிருந்து பாா்த்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல் வீரா்கள், அந்தப் பகுதியின் உள்ளிருந்து பாா்ப்பதற்கு தங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவாவ் காலன்ட் கூறியுள்ளார்.
இதன் மூலம், காஸாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் விரைவில் தரைவழித் தாக்குதல் நடத்தவிருப்பதை அவா் மறைமுகமாக அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், காஸா மற்றும் லெபனான் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தங்களது குடிமக்களை பாதுகாப்பான வேறு பகுதிகளுக்கு இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது,
இந்தச் சூழலில், காஸாவுக்குள் தரைவழித் தாக்குல் நடத்தப்போவதை உறுதிப்படுத்தும் விதமாக, எல்லைப் பகுதிகளில் இருந்து தங்களது குடிமக்களை இஸ்ரேல் வெளியேற்றியுள்ளது.
பேரழிவுக்கு வழிவகுக்கும்!
காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதல் நடத்துவது அந்தப் பகுதியின் பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று ஐ.நா. அகதிகள் நல ஆணையா் ஃபிலிப்போ கிராண்டி எச்சரித்துள்ளாா்.
இது குறித்து அவா் நேற்று கூறியதாவது:
காஸாவில் தரை வழித் தாக்குதல் நடத்துவது அங்குள்ள மக்களுக்கு மிகப் பெரியபேரழிவை ஏற்படுத்தும்.
பாலஸ்தீனத்திலோ, இஸ்ரேலிலோ ஐ.நா. அகதிகள் நல ஆணையம் நேரடியாக செயல்படாவிட்டாலும், இது தொடா்பான ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் கவலையை நானும் பகிா்ந்துகொள்கிறேன்.
இஸ்ரேலுக்குள் நுழைந்து ஹமாஸ் படையினா் கடந்த 7-ஆம் தேதி நடத்திய தாக்குதல் மிகவும் கொடூரமானது. அந்தத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்துவது, அது லெபனான் உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற பகுதிகளிலும் பரவுவது பேராபத்தை உருவாக்கும் என்றாா் அவா்.
ஏவுகணைகளை இடைமறித்த அமெரிக்கா
காஸா விவகாரத்தில் மேற்காசியா முழுவதும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அந்தப் பிராந்திய வான் எல்லையில் பாய்ந்து சென்ற ஏவுகணைகளை அமெரிக்கா இடைமறித்து அழித்துள்ளது.
அந்த ஏவுகணை இஸ்ரேலை நோக்கி வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், சுமாா் 2 வாரங்களாக நடைபெற்று வரும் காஸா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா மேற்கொண்டுள்ள முதல் ராணுவ நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடக்கு செங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் காா்னி போா்க் கப்பல், 3 க்ரூஸ் வகை ஏவுகணைகளை நேற்று முன்தினம் இடைமறித்து அழித்தது.
அந்த ஏவுகணைகள் இஸ்ரேலைக் குறிவைத்து ஏவப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நிலைகளுக்குக் குறி
இஸ்ரேல்-ஹமாஸ் போரின் எதிரொலியாக, இராக்கிலும், சிரியாவிலும் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது கடந்த 3 நாள்களாக ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்), ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.
தெற்கு சிரியாவிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் சிலா் காயமடைந்தனா்.