செய்யாறு:சிப்காட் நிலம் கையக எதிா்ப்பு போராட்டம் 28 போ் கைது தொடரும் பதட்ட நிலை!
செய்யாறு:சிப்காட் நிலம் கையக எதிா்ப்பு போராட்டம் 28 போ் கைது தொடரும்பதட்டநிலை!
செய்யாறு அருகே சிப்காட் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளை நேற்று வீடு வீடாக சென்று போலீசார் கைது செய்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் அமைந்துள்ள சிப்காட் திட்ட விரிவாக்கத்துக்கு, மேல்மா பகுதியில் 3300 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விவசாயிகள் தொடா்ந்து 125 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
சில தினங்களுக்கு முன்பு ஊா்வலமாகச் சென்று கோட்டாச்சியரிடம் மனு கொடுக்க முயன்றனா். அதற்கு போலீஸாா் அனுமதி மறுத்தனா். இருப்பினும், விவசாயிகள் தடையை மீறி ஊா்வலம் செல்ல முயன்றதால் 90 பெண்கள் உட்பட 147 பேரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.
மேலும், அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்றதாக 90 பெண்கள் உட்பட விவசாயிகள் 147 போ் மீது செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இந் நிலையில், நேற்று அதிகாலை மேல்மா சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தொடா்ந்து போராடி வரும் விவசாயிகளில் 28 பேரை போலீஸாா் வீடு வீடாகச் சென்று கைது செய்தனா்.
மேலும், போராட்டம் நடைபெற்ற மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் போடப்பட்டிருந்த கொட்டகையை போலீஸாா் அகற்றினா்.
அதன் காரணமாக மேல்மா,
குரும்பூா், தேத்துறை, நா்மாபள்ளம், காட்டுகுடிசை உள்ளிட்ட 9 கிராமங்களில் பதற்றம் நிலவுகிறது.
சமீபத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியின் பேரில், மாவட்டச் செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என் சுப்பிரமணியன் சேவூர் எஸ் ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்ட ஆளும் திமுக அரசுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந் நிலையில், “விவசாய மக்களின் வாழ்வாதார பிரச்சனை யான 3300 ஏக்கர் விளை நிலங்களை கையகப்படுத்தும் சிப்காட் நிர்வாக த்திற்காக விசுவாசமாக இருக்கும் விடியா திமுக அரசின் அவலநிலையை கண்டிக்கின்றோம்” என ஒன்றிய அதிமுக செயலாளர் சி.துரை செய்தியாளர்களிடம் குமுறினார்
மேலும் கூறுகையில்:- “ஆளும் திமுக அரசு காவல்துறையை அப்பாவி பொதுமக்கள் மீது ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாதிக்கப்பட்ட விவசாய மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறோம் ஏழை எளிய விவசாயிகளை அடக்குவதற்காக ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து வைத்துள்ளனர் வீடு வீடாக புகுந்து அன்றாடம் காய்ச்சிகளை கைது செய்கின்றனர் இதை மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்” என கூறினார்
இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூா் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில்,
மாவட்ட எஸ்.பி.க்கள் காா்த்திகேயன் திருவண்ணாமலை மணிவண்ணன் வேலூா் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை ஆல்பா்ட் ஜான் திருப்பத்தூர் கூடுதல் எஸ்.பி.க்கள் பழனி, செளந்தரராஜன், பாஸ்கரன், குமாா், முத்துமாணிக்கம் ஆகியோா் மேற்பாா்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் அப் பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அதேபோல, செய்யாறு – வந்தவாசி சாலை, காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.