திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட் அறுசுவை உணவு!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்தநாள் விழா நோயாளிகளுக்கு பிஸ்கட்டுகள், அறுசுவை உணவு!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் பிறந்தநாளையொட்டி வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம் பிஸ்கட் அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டன
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன் பிறந்த நாளையொட்டி நேற்று அவரது எரமலூர் கிராமத்தில் உள்ள இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் எஸ்.அம்பேத்குமார், ஓ ஜோதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன்,நகரமன்றத் தலைவர் எச் ஜலால்,வட்டாட்சியர் பொன்னுசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் ஏ. தயாளன், ஒன்றிய கழக செயலாளர்கள் டி.ராதா, ப. இளங்கோவன், சி.ஆர். பெருமாள்,
ஏ.சுந்தரேசன், மாவட்ட துணை செயலாளர்கள் என்.பாண்டுரங்கன், க. லோகநாதன், மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி துணைத் தலைவர் அன்னை க.சீனு, மாவட்ட பிரதிநிதி கொட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பிரியா ஆதிகேசவன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி அமைப்பாளர் ஏ.மணிகண்டன், தெள்ளார் ஆ.கோபிநாதன்,தேசூர் நகர கழக செயலாளர் டி கே மோகன், தேசூர் ஈஸ்வரன் கோவில் அறங்காவல் குழு தலைவர் ஜெஎஸ். சரவணன், மகளிர் தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வி. லட்சுமி, ஒன்றிய பொருளாளர் கீழ்நர்மா ரமேஷ், வந்தவாசி கிழக்கு இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் எம்.வினோத்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சென்ற மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அங்குள்ள நோயாளிகளுக்கு பழம் பிஸ்கட் உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்.
யாதவர் தெருவில் உள்ள வள்ளலார் மண்டபத்தில் அனைவருக்கும் அறுசுவை மதிய உணவு வழங்கினார்
மேலும் மாவட்ட திமுக அலுவலக வளாகத்தில் பிரியாணி உள்ளிட்ட அறுசுவை உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன.
முன்னதாக வாழ்த்த சொல்ல வந்த அனைவரையும் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் இ.எஸ்.டி கார்த்திக் வரவேற்றார்.